இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளான்
இச் சம்பவம் இன்று காலை வட்டவளை லொனக் பகுதியில் இடம் பெற்று உள்ளது.
வட்டவளை நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லொனக் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் லொனக் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நோட்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 20 வயது மதிக்கத்தக்க ரஞ்சித்குமார் என்பவராவார்.அடையாளம் காணப்பட்டுளா்ளார் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.இது தொடர்பான விசாரணையை நோட்டன் தடையவியல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தடையவியல் பொலிசார் சகல பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடற் கூற்று பரிசோதனை செய்ய உள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


