உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரபல இயக்குநருக்கு 5 ஆண்டுகள் சிறை!

சினிமா 3 மணி நேரம் முன்
83 பார்வைகள்

ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் விருதுகளைப் பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் மற்றும் 1 மாதம் சிறைத் தண்டனை விதித்து, தெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே, ஈரானிய அரசுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. மேலும், ஜாஃபர் பனாஹியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு அவர் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இயக்குநர் ஜாஃபர் பனாஹி 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேலும், அதே ஆண்டில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், திரைப்படங்களை இயக்கவும், திரைக்கதை எழுதுவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜாஃபர் பனாஹி 7 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2023 பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

ஈரானிய அரசு விதித்துள்ள தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இடையே இயக்குநர் ஜாஃபர் பனாஹி ஈரானிய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிரான கதைகளத்துடன் படங்களைத் தொடர்ந்து இயக்கி வருகிறார்.

இவரது, “திஸ் இஸ் நாட் எ ஃபிலிம் (2011)”, டாக்ஸி (2015) மற்றும் “நோ பேர்ஸ் (2022)” உள்ளிட்ட படங்கள் சர்வதேச விழாக்களில் விருதுகளைக் குவித்துள்ளன.

சமீபத்தில் வெளியான இவரது “இட் வாஸ் ஜஸ்ட் என் ஆக்சிடெண்ட்” எனும் திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பால்ம் டி ஆர் விருதைப் பெற்றதுடன், ஆஸ்கர் விருதுகளில் 2 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் 2

மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார். தீபாவளிக்கு பிரமாண்டாமாக வெளியிட படக்குழு தயாராகி வருகின்றது. இந்த படத்தில் நயன்தாரா, ஊர்வசி,சினேகா, ரெஜினா, யோகி பாபு உள்ளிட்டோர்…

82 0 0
சினிமா

AI காணொளி விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நடிகை

சமூக வலைதளங்களில் தனது முகத்தை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தவறாகப் பயன்படுத்தி மார்பிங் செய்து பரப்பப்பட்டுவரும் ஆபாசக் காணொளி தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள…

80 0 0
சினிமா

நடிகை அசினின் மகள் குறித்து வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல்…

94 0 0
சினிமா

தர்மன் திரைப்படத்திலும் பழக்கடை மூர்த்தி?

ஜெயிலர் 2 திரைப்படத்தில் ‘பழக்கடை மூர்த்தி’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் நமோ நாராயணன், அடுத்ததாக ‘தர்மன்’ திரைப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில்…

86 0 0