உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முல்லைத்தீவு–கொக்கிளாய் பேருந்து சேவையில் பயணிகளுக்கு இடையூறு : பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
87 பார்வைகள்

முல்லைத்தீவு–கொக்கிளாய் பேருந்துச் சேவையின்போது பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநருக்கு ஐந்து நாட்கள் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த ஒக்ரோபர் 21ஆம் திகதி முல்லைத்தீவு–கொக்கிளாய் பேருந்துச் சேவையின்போது, மதுபோதையில் பேருந்தில் ஏறிய சிலரால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இச்சம்பவத்தில் பேருந்தின் உரிமையாளர், சாரதி மற்றும் நடத்துநர் தமது கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றத் தவறியதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் சட்ட ஏற்பாடுகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தமக்குரிய பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவதுடன், பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சேவைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் வலியுறுத்தினார்.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளின்போது பயணிகள் ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ, சாரதிகள் அல்லது நடத்துநர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டாலோ, அது தொடர்பான ஆதாரங்களுடன் (ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேயிலை உற்பத்தியைப் பாதுகாக்க புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்!

நாட்டின் வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெருக்குவதில் பாரிய பங்களிப்பை வழங்கும் தேயிலை உற்பதியைப் பாதுகாப்பதற்கும், தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்கும் புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய,…

58 0 0
இலங்கை செய்திகள்

விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.…

81 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சாரதிகளுக்கு திடீர் போ@தைப்பொருள் பரிசோதனை!

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இன்று (29) சாரதிகளை இலக்கு வைத்து திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின்…

76 0 0
இலங்கை செய்திகள்

இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளான் இச் சம்பவம் இன்று காலை வட்டவளை லொனக் பகுதியில் இடம் பெற்று உள்ளது. வட்டவளை நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

91 0 0