உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரவில்லை!!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
95 பார்வைகள்

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுத்தாலும், அரசாங்கம் நாட்டின் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு அமைவாகவே செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு மேலாகச் சென்று எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஞானசார தேரர் தொடர்பில் முப்பீட மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலை ஆணையாளருக்கு முன்னர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், சிறைச்சாலையின் நிலையான கட்டளைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளான அனுநாயக்க தேரர்கள் மற்றும் பதிவாளர் தேரர்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடல்களின் பின்னரே சிறைச்சாலையின் நிலையான கட்டளைகளைத் திருத்துவது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தற்போது திருத்தப்பட்டுள்ள சிறைச்சாலை நிலையான கட்டளைகளுக்கு அமைவாகவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றும் வகையில் நீதிமன்றத்திற்கு மேலாகச் சென்று எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள அரசாங்கத்திற்கு எண்ணமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 150 கனமீற்றர் நீர் மகாவலி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.…

82 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் காணாமல்போன மூன்று கடற்றொழிலாளர்களைத் தேட உலங்கு வானூர்தியை பயன்படுத்த நடவடிக்கை!

முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மூன்று கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்கு, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த 26ஆம்…

93 0 0
இலங்கை செய்திகள்

”புதிய சட்டங்கள் இல்லாவிட்டால் PTA மட்டுமே எஞ்சும்”

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குமான பிரதான நோக்கத்துடனேயே புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (27) நடைபெற்ற…

88 0 0
இலங்கை செய்திகள்

ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!

ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்கி, உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களைச் சென்றடைவதற்கும், அவர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பும் வருமானமும்…

87 0 0