உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

”புதிய சட்டங்கள் இல்லாவிட்டால் PTA மட்டுமே எஞ்சும்”

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
76 பார்வைகள்

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குமான பிரதான நோக்கத்துடனேயே புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், குறித்த சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தல​ைமுடி வளர்த்திருத்தல் அல்லது உடலில் பச்சைக் குத்தியிருத்தல் போன்ற விடயங்கள் சாதாரண குடிமக்களை இலக்கு வைத்து அல்லாமல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவே சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஆதரவளிப்போர், உதவி புரிவோர் மற்றும் நிதி அனுசரணை வழங்குவோருக்கு எதிராகக் கடுமையான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் இந்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் எவரும் பயப்படத் தேவையில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

மேலும், நாட்டுக்கு இத்தகைய சட்டம் அவசியமானது எனக் குறிப்பிட்ட அமைச்சர், கைது செய்யப்படும் நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான அதிகாரங்களுடன் இந்தச் சட்டம் செயற்படும் எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதே தமது வாக்குறுதியாக இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், அதனை ஒழித்துவிட்டு நாட்டைப் பாதுகாப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குமே புதிய இரண்டு சட்டங்களும் கொண்டுவரப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டங்கள் மனித உரிமைகளுக்குப் பொருத்தமற்றவை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதற்கு ஏற்ப பாராளுமன்றம் செயற்படத் தயாராக உள்ளதாகவும், இவை இரண்டும் இல்லாவிட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையே கொண்டுவர நேரிடும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரவில்லை!!

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று…

69 0 0
இலங்கை செய்திகள்

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 150 கனமீற்றர் நீர் மகாவலி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.…

68 0 0
இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் காணாமல்போன மூன்று கடற்றொழிலாளர்களைத் தேட உலங்கு வானூர்தியை பயன்படுத்த நடவடிக்கை!

முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மூன்று கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்கு, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த 26ஆம்…

81 0 0
இலங்கை செய்திகள்

ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!

ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்கி, உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களைச் சென்றடைவதற்கும், அவர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பும் வருமானமும்…

82 0 0