உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நவம்பர் 3 இல் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது விவாதம்!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
77 பார்வைகள்

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டதாகக் கூறி சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

கடந்த 9ஆம் திகதி 44 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்ட இந்தப் பிரேரணையில் சபாநாயகருக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தைத் தொடர்ந்து ஏனைய நாட்களில் இறக்குமதி-ஏற்றுமதி சட்ட ஒழுங்குவிதிகள், சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மற்றும் தனிநபர் பிரேரணைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

”புதிய சட்டங்கள் இல்லாவிட்டால் PTA மட்டுமே எஞ்சும்”

நாட்டை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்குமான பிரதான நோக்கத்துடனேயே புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (27) நடைபெற்ற…

69 0 0
இலங்கை செய்திகள்

ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்க வேண்டும் – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!

ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்கி, உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களைச் சென்றடைவதற்கும், அவர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பும் வருமானமும்…

76 0 0
இலங்கை செய்திகள்

கொட்டகலை கொமர்ஷியல் வாவி பிரதேசத்தில் The Cafe Chai House நிறுவனம் திறந்து வைப்பு

கொட்டகலை கொமர்ஷல் வாவி பிரதேசத்தில் இன்றைய தினம் (27) The Cafe Chai House நிறுவனத்தை கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் விமரிசையாக ஆரம்பித்துவைத்தர்.…

75 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பெருமளவான போ@தை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது!

யாழில் இன்றையதினம் (27) பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்டம் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் –…

71 0 0