மின்சாரம் தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னந்தோப்பில் மின்கம்பியைச் சீரமைக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


