போ*தைப்பொருளுடன் சிக்கிய நபர்.!
அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவர வாவி அணைக்கட்டு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மாலை அநுராதபுரம் குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 33 வயதுடைய அட்டவீரகொல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இந்தச் சம்பவத்தின் போது, 55 கிராம் 750 மில்லிகிராம் போதைப்பொருளோடு போதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூபா 11,590 பணத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


