உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
86 பார்வைகள்

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய, பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் அடங்குவதாக நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அதேநேரம் எயார்பஸ் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாளை (28) கொழும்பு நிரந்தர நீதாயம் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை இம்மாதம் 30 ஆம் திகதி தமது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் சிக்கிய நபர்.!

அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவர வாவி அணைக்கட்டு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மாலை அநுராதபுரம் குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை…

71 0 0
இலங்கை செய்திகள்

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை.!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 23 மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள்…

75 0 0
இலங்கை செய்திகள்

யானை தாக்கி சுற்றுலா வழிகாட்டி உ**யிரிழப்பு.!

அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்த விகாரை வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த யானை தாக்கியதில் காயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்…

82 0 0
இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழா.!

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கான தகைமை அடிப்படை மற்றும் முதல் இரண்டு மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு வடமாகாணம்,…

80 0 0