உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழக சிறையில் பரபரப்பு – 17 கைதிகள் தப்பியோட்டம்!

இந்திய செய்திகள் 2 மணி நேரம் முன்
91 பார்வைகள்

தமிழ்நாட்டின் தேனி கிளைச் சிறையில் திங்கள்கிழமை (26) நள்ளிரவில் கைதி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரது அறைக்குள் சென்ற சிறை ஊழியர்களைத் தாக்கிவிட்டு, 17 கைதிகள் துணிச்சலான முறையில் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அண்டை மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 16 இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் தப்பிச் சென்றவர்களைக் கண்டறிய 17 தனிப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

இன்று (27) காலை நிலவரப்படி, சிறையிலிருந்து தப்பிச் சென்ற 17 கைதிகளில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Image

எஞ்சியவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, இரண்டு தலைமை காவலர்கள் உட்பட ஒன்பது சிறைத்துறை பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விபத்துசெய்திகள்

நேற்றிரவு இரவு, கைதிகளில் ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சிறை ஊழியர்கள் அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றனர்.

அப்போது, ​​அந்த அறையில் இருந்த 17 கைதிகளும் சிறை ஊழியர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் மூன்று சிறை ஊழியர்கள் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

கரூரிலேயே அவனை முடித்திருந்தால்..!! அன்பில் மகேஷ் ஆதரவாளர்களின் கருத்தால் சர்ச்சை!

தமிழ் நாட்டின் தனியார் பாடசாலை நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்…

82 0 0
இந்திய செய்திகள்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைச் செய்தி!

வங்கக் கடலில் ‘அர்னாப்’ (Arnab) புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயல் இன்று (26) நள்ளிரவுக்குள் தீவிர புயலாகவும், நாளைய (27) தினத்துக்குள் மிகத் தீவிர புயலாகவும் வலுவடையக்கூடும்…

79 0 0
இந்திய செய்திகள்

அமித் ஷா தொடர்பான அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 2018-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (26) விடுதலை…

84 0 0
இந்திய செய்திகள்

துப்பில்லாத ஹீரோவாக மாறிய துப்பாக்கி ஹீரோ: மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் தொடர் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தொடரும் தாக்குதல்கள், உயிரிழப்பு சம்பவங்கள்…

98 0 0