உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
81 பார்வைகள்

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

அதற்கமைய, பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் அடங்குவதாக நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அதேநேரம் எயார்பஸ் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாளை (28) கொழும்பு நிரந்தர நீதாயம் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை இம்மாதம் 30 ஆம் திகதி தமது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழா.!

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கான தகைமை அடிப்படை மற்றும் முதல் இரண்டு மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு வடமாகாணம்,…

1 0 0
இலங்கை செய்திகள்

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவு கொழும்புக்கு வருகை.!

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவைச் (1TS) சேர்ந்த ‘திர்’ (Tir), ‘சுஜாதா’ (Sujata) ஆகிய இந்தியக் கடற்படைக் கப்பல்களும், ‘சாரதி’ (Sarathi) என்னும் இந்தியக் கடலோர…

76 0 0
இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர்…

71 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் ஆரம்பித்து வைப்பு.!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ், இணைந்த நேர அட்டவணைக்கு அமைவான…

82 0 0