கரூரிலேயே அவனை முடித்திருந்தால்..!! அன்பில் மகேஷ் ஆதரவாளர்களின் கருத்தால் சர்ச்சை!
தமிழ் நாட்டின் தனியார் பாடசாலை நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரது ஆதரவாளர்களில் ஒருவர், “கரூரிலேயே அவனை முடித்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?” எனக் கூச்சலிட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிர்மல் குமார், கரூர் சம்பவத்தின் பின்னணியில் தி.மு.க.வினருக்குத் தொடர்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், கரூரில் இடம்பெற்ற சம்பவத்தில் 41 பேர் இலக்காக இருக்கவில்லை என்றும், நடிகர் விஜய்யே இலக்காக இருந்ததாகவும் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.


