உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

க.பொ.த. சாதாரண தர அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
91 பார்வைகள்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, சப்ரகமுவ மாகாணத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு, அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகளில் தோற்ற முடியாத மாணவர்களுக்கு இந்த விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ள நிலைமை சீரடைந்த பின்னர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையங்களுக்குச் சென்று அறிவிப்பதன் மூலம் புதிய பரீட்சைத் திகதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களின் பரீட்சை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வெள்ளப்பெருக்கினால் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத மாணவர்களும் தங்களது செய்முறைப் பரீட்சைகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழா.!

தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கல் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கான தகைமை அடிப்படை மற்றும் முதல் இரண்டு மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு வடமாகாணம்,…

73 0 0
இலங்கை செய்திகள்

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவு கொழும்புக்கு வருகை.!

இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவைச் (1TS) சேர்ந்த ‘திர்’ (Tir), ‘சுஜாதா’ (Sujata) ஆகிய இந்தியக் கடற்படைக் கப்பல்களும், ‘சாரதி’ (Sarathi) என்னும் இந்தியக் கடலோர…

76 0 0
இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர்…

72 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை…

82 0 0