உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொ**லை; முக்கிய துப்பாக்கிதாரி கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
82 பார்வைகள்

களுத்துறை, நாகொட பகுதியில் உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய துப்பாக்கிதாரி கடுவலை, ரனல பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில், களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பதுளைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஆவார்.

கடந்த வெள்ளிக்கிழமை (09) நாகொடை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் 54 வயதுடைய உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த அவரது மனைவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் சிசிரிவி காட்சிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம், குற்றத்துடன் தொடர்புடைய முக்கிய துப்பாக்கிதாரி கடுவலை பகுதியில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ‘டிப்பிடிகொட சக்தி’ என்பவரின் உறவினருக்குச் சொந்தமான வீட்டிலேயே இவர் பதுங்கியிருந்துள்ளார்.

‘களுத்துறை நவீன்’ எனப்படும் நபரின் உத்தரவுக்கு அமையவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையில் பயன்படுத்தப்பட்ட T-56 ரக துப்பாக்கி மற்றொருவரால் துப்பாக்கிதாரியிடம் வழங்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பின், அந்தத் துப்பாக்கி தெற்கு அதிவேக வீதியின் தொடாங்கொடை பரிமாற்றப் பகுதிக்கு அருகில் மற்றுமொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் தொடர்மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 25.10.2026 நேற்று தொடக்கம் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்று பிற்பகல் முதல் சாதாரண மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.…

83 0 0
இலங்கை செய்திகள்

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆரம்பித்து வைத்தார். பிரஜா சக்தி மூலம் 54 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார…

78 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் உ**யிரிழப்பு.!

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் அதிகாரிகள் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக செயற்பாட்டாளர் வசந்த…

82 0 0
இலங்கை செய்திகள்

சீரற்ற காலநிலை; 26 பாடசாலைகளுக்கு விடுமுறை.!

சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 26 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய…

93 0 0