சீரற்ற காலநிலை; 26 பாடசாலைகளுக்கு விடுமுறை.!
சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 26 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தொடர்மழை மற்றும் மண்சரிவினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


