உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்று இடம்பெற்ற கோர விபத்து.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
71 பார்வைகள்

அஹங்கம, கதலுவ பாலத்திற்கு அருகில் இன்று(26) பேருந்து ஒன்றும் டிப்பர் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஐவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தும், மாத்தறையிலிருந்து காலி நோக்கிச் சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பேருந்தில் பயணித்த நான்கு பயணிகளும் டிப்பரின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராபிட்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டிப்பர் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த பேருந்துடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் உ**யிரிழப்பு.!

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் அதிகாரிகள் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக செயற்பாட்டாளர் வசந்த…

80 0 0
இலங்கை செய்திகள்

சீரற்ற காலநிலை; 26 பாடசாலைகளுக்கு விடுமுறை.!

சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 26 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய…

87 0 0
இலங்கை செய்திகள்

புத்தளத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவு.!

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று…

74 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இருந்து நெடுந்தூர பேருந்து சேவைகள் இணைந்த நேர அட்டவணையில் ஆரம்பம்.!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான நெடுந்தூரப் பேருந்து சேவைகள் நாளை (27.10.2026) செவ்வாய்க்கிழமை முதல் இணைந்த…

82 0 0