உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

89 பார்வைகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் (BIA) இரு வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து சுமார் 58.5 இலட்சம் ரூபா பெறுமதியான 39,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது.

வானூர்தி நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள பசுமை வழித்தடத்தின் (Green Channel) ஊடாகச் சென்றுகொண்டிருந்த 38 மற்றும் 41 வயதுடைய இரு வெளிநாட்டுப் பிரஜைகளும் சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

குறித்த இருவரும் வணிக நிறுவன ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், AK 47 என்ற வானூர்தி சேவையின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 195 அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, சுங்கத் திணைக்களத்தின் விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் அனைத்தையும் அரசுடைமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் சீரற்ற காலநிலையால் பல குடும்பங்கள் பாதிப்பு; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் நேரடி விஜயம்.!

மன்னார் மாவட்டத்தின் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டிக்கொட்டு பகுதிகளில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகளை நேரில் ஆராயும் நோக்கில்…

67 0 0
இலங்கை செய்திகள்

வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட என்.பி.பி. அரசு.!

தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலான அடக்குமுறைச் சட்டங்களை அரசு அடிக்கடி நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருகின்றது என்று…

74 0 0
இலங்கை செய்திகள்

நௌபர் மௌலவி உட்பட இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

கடந்த 2018 ஆம் ஆண்டு வனாத்தவில்லு, லாக்டோவத்த பகுதியில் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் ஏனைய தீவிரவாதிகளுடன் இணைந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து,…

61 0 0
இலங்கை செய்திகள்

தடுப்புக்காவலில் இருந்த நபர் உ**யிரிழப்பு; பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்.!

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பொலிஸ் நிலையத்தின் மூன்று…

72 0 0