உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கட்டுக்கரை குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கை; முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
92 பார்வைகள்

மன்னார் மாவட்டம் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2026/2027 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் விவசாயக் குழு கூட்ட தீர்மானங்கள் படி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) காலை 10.30 மணியளவில் சர்வமத தலைவர்கள் ஆசியுடன் திறந்து விடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில்,விவசாய திணைக்கள பணிப்பாளர், திணைக்கள அதிகாரிகள் இணைந்து வைபவ ரீதியாக நீர் விநியோகத்தை திறந்து வைத்தனர்.

இம்முறை மன்னார் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாகச் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

அதற்கமைய முதல் கட்டமாக நீர் விநியோகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(23) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு விவசாயிகள் அனைவரும் குறுகிய காலத்தில் (3 அல்லது 3.5 மாதங்கள்) பலன் தரக்கூடிய நெல் இனங்களை பயிரிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாவீரர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமான பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 10:00 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டு ஆரம்பமானது. இதில் முதலாவதாக சென்ற கூட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியின் 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல்!!

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரை கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில்…

84 0 0
இலங்கை செய்திகள்

ராஜ் சோமதேவா இலங்கை அரசின் கைக்கூலி –  காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி விசனம்!

செம்மணி மனித புதைகுழியின் தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவா தமிழின படுகொலைகளை மூடி மறைக்கும் இலங்கை அரசின் கைக்கூலியாக செயல்பட்டமை அவரது இடைக்கால அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என…

74 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் நிதி மோசடி வழக்கு:நாமல் எம்.பிக்குமறியல் நீடிப்பு!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும்…

61 0 0