மாவீரர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமான பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 10:00 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டு ஆரம்பமானது.
இதில் முதலாவதாக சென்ற கூட்ட அறிக்கை தொடர்பில் ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து
நிதி கொடுக்கல்களுக்கான சபை அனுமதிகளும், சபையின் வணிக மையங்களை
குத்தகைக்கு வழங்குவதற்கான அனுமதியும்,
நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்தினரால் வளைவு அமைப்பதற்கான உரிய சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டால் அதற்கான அனுமதி வழங்குவதென்றும், சபையின் ஜேசிபி வாகனைத்தை மணித்தியாலம்
7500/- ரூபா வாடகைக்கு வளங்குவதென்றும்,
மருதங்குள வீதியை திருத்த ஒப்பந்தம் செய்த ஒப்பந்ததாரர் அதனை மேற்கொள்ளாமையால் அதனை மீள ஒப்பந்தம் வழங்குவதென்றும், பருத்தித்துறை நகரசபை பருத்தித்துறை பிரதேச சபை கழிவகற்றுவதற்கு டிசம்பர் 31 வரை அனுமதிப்பதென்றும்,
நண்பர்கள் அமைப்பால் தமது கிராம வீதிக்களுக்கு பெயர் பலகை இடுவதற்கான அனுமதியும் சபையால் வழங்கப்பட்டதுடன், மக்களால் அனுப்ப்பட்ட முறைப்பாடு தொடர்பாக ஆராயப்பட்டன.
மேலும் 2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட நிதி ஊடக கலைஞர்களுக்கு 5 இலட்சம் பெறுமதியில் இசை கருவிகள் வழங்குவதென்றும்,125 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குவதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன்
வரவு செலவு திட்ட முன் வரைவுபும் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை தவிசளருக்கு எதிராக சமூக வலை தளங்களில் மேற்கொள்ளப்படும் விஷம பிரசாரங்களுக்கு எதிராக அனைத்து கட்சியினரும் தமது எதிப்பை பதிவு செய்திருந்தனர்


