ராவல்பிண்டியில் மாபெரும் சாதனை: 430 ஓட்டங்களை கடந்து இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முக்கோணத் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, தனது மிகவுயர்ந்த வெற்றி சாதனை படைத்தது.
430 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது.
பவன் ரத்நாயக்க அபாரமாக விளையாடி 130 ஓட்டங்கள் குவித்தார். தசுன் ஷானக மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் தலா 97 ஓட்டங்கள் எடுத்தனர். ஜனித் லியனகே ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
முன்னதாக, இங்கிலாந்து அணி தனது 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 429 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்டமான மொத்த ஓட்டங்களை குவித்தது. இந்த போட்டியில் ஹாரி புரூக், ஆண்களுக்கான ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தும் தோல்வியடைந்த முதல் வீரர் என்ற நிலையை எட்டினார்.
இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 79 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சாம் கர்ரன் 103 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

