உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணியில் இருந்து மீட்கப்பட்ட ஆணிகளும், உலோகங்களும் சவப்பெட்டிகளுக்குரியவையே.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
77 பார்வைகள்

செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணிகள், உலோகங்கள் உள்ளிட்ட இதர பொருட்கள் சவப் பெட்டிகளில் இருந்து பிரிகையடைந்த கூறுகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணிப் புதைகுழி தொடர்பில் அவர் முன்வைத்துள்ள தடயவியல் பகுப்பாய்வு அறிக்கையின் ஒரு பகுதியில் உள்ள விடயங்களின் சாரம்சமாவது,
“செம்மணிப் புதைகுழி அகழாய்வின்போது உடற்கூறியல் தொடர்பிழந்த பல என்புக் குவியல்கள் இருந்தன. அந்த என்புக் குவியல்களுடன் ஆணிகள், உலோகத் துண்டுகள் என்பனவும் மீட்கப்பட்டன. இவை முன்னர் சவப்பெட்டிகளைக் கொண்டிருந்த புதைகட்டமைப்புகளுடன் தொடர்புடையவையாக இருக்கலாம்.

இந்தக் கண்டுபிடிப்புகள், உடற்கூறியல் தொடர்பு இழந்த சில எலும்புத் தொகுப்புகள், பின்னர் மேற்கொள்ளப்பட்ட புதைகுழி தோண்டும் நடவடிக்கைகளால் ஏற்பட்ட இடையூறுகளின் விளைவாக உருவாகியிருக்கலாம் என்பதைக் குறிக்கின்றன.

இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே இருந்த புதைகுழிகளைச் சீர்குலைத்து, எலும்புக்கூட்டு எச்சங்கள் இடம்பெயர்வதற்கும் வேறு இடங்களில் இரண்டாம் நிலையாகக் குவிவதற்கும் காரணமாகியிருக்கலாம்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு.!

மழைக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைத்து, அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர உதவும் நோக்கில், விசுவமடு பகுதியில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. புதிய…

82 0 0
இலங்கை செய்திகள்

உயிருக்குப் போராடும் யானை; தொடரும் மருத்துவ சிகிச்சைகள்.!

வயல் பகுதியில் உயிருக்குப் போராடி வரும் காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு மருத்துவப் பிரிவினரால் தீவிர மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம்…

78 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இலங்கையர்கள் கைது.!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில், படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த 3 பேரை இராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் பிடித்து விசாரணை…

87 0 0
இலங்கை செய்திகள்

புதிய சட்டமூலத்தால் ஆபத்து எதுவுமில்லை.!

இலங்கையில் தற்போது பேசுபொருளாகியுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் குறித்துப் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் தேவையற்றது என்றும், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது போராட்டங்களில்…

71 0 0