உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதிய சட்டமூலத்தால் ஆபத்து எதுவுமில்லை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
70 பார்வைகள்

இலங்கையில் தற்போது பேசுபொருளாகியுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் குறித்துப் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் தேவையற்றது என்றும், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது போராட்டங்களில் ஈடுபடும் உரிமையையோ அந்தச் சட்டமூலம் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

புதிய சட்டமூலம் குறித்து நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சட்டமூலத்தை முறையாக வாசித்துப் புரிந்துகொள்ளாததே இத்தகைய சந்தேகங்களுக்கு முதன்மைக் காரணம். பொறுப்புள்ள அரசுக்குத் தன்னைத்தானே பாதுகாப்பதை விட, ஒட்டுமொத்த தேசத்தையும் மக்களையும் பாதுகாப்பதே முதன்மையான கடமை.

1979ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மனித உரிமைகளைப் பாதிக்கும் வகையில் அமைந்திருந்ததால், அதனை நீக்கிவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்த மாற்றம் செய்யப்படுகின்றது.

தேசத்தைப் பாதுகாத்தல், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், அரசமைப்பைப் பாதுகாத்தல், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டல் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் ஆகிய 5 முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே புதிய சட்டமூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ் இராணுவத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள், புதிய சட்டமூலத்தின் 21ஆவது பிரிவின் ஊடாகக் கடற்படை மற்றும் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டமூலத்தின் 24ஆவது பிரிவின் கீழ், பொலிஸார் இல்லாத போது அல்லது பொலிஸாரால் உடனடியாக வருகை தர முடியாத சூழல் போன்ற வரையறுக்கப்பட்ட மற்றும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே பாதுகாப்புப் படையினர் சந்தேகநபர்களைக் கைது செய்யும் அதிகாரத்தைப் பெறுகின்றனர்.

உடனடி பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காகவும், பொது அமைதியைப் பேணுவதற்காகவும் இராணுவம் அனுப்பப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த அதிகாரம் பயன்படுத்தப்படும்.

கைதுசெய்யப்படும் நபர்களை உடனடியாகப் பொலிஸாரிடம் ஒப்படைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலமானது அரசைப் பாதுகாப்பதற்காக அல்லாமல், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே ஆகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணியில் இருந்து மீட்கப்பட்ட ஆணிகளும், உலோகங்களும் சவப்பெட்டிகளுக்குரியவையே.!

செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணிகள், உலோகங்கள் உள்ளிட்ட இதர பொருட்கள் சவப் பெட்டிகளில் இருந்து பிரிகையடைந்த கூறுகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டியுள்ளார்.…

71 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இலங்கையர்கள் கைது.!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில், படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த 3 பேரை இராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் பிடித்து விசாரணை…

84 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி விடயத்தில் சந்தேகம் இருந்தால் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்!

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம்.…

83 0 0
இலங்கை செய்திகள்

சிறைச்சாலை நரகமாக மாறியுள்ளது.!

“சிறைச்சாலை நரகத்தைப் போன்று உள்ளது. சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கும் நிம்மதியில்லை, உத்தியோகத்தர்களுக்கும் நிம்மதியில்லை. அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை. பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் கவலையுடன் சிறையில் உள்ளேன்.…

91 0 0