உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உயிருக்குப் போராடும் யானை; தொடரும் மருத்துவ சிகிச்சைகள்.!

இலங்கை செய்திகள் 58 நிமிடங்கள் முன்
78 பார்வைகள்

வயல் பகுதியில் உயிருக்குப் போராடி வரும் காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு மருத்துவப் பிரிவினரால் தீவிர மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சேகப்பற்று பகுதியிலுள்ள வயல் பகுதியில் கடந்த புதன்கிழமை(21) 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை சுகயீனமற்ற நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

மேலும், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்புப் படைப் பிரிவு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி எம்.ஜி. அஜித் குணரத்ன விடுத்த அவசர கோரிக்கைக்கு அமைவாக, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் குறித்த யானைக்கான சிகிச்சை மற்றும் மீட்பு பணிகளுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட யானைக்குத் தங்கு தடையின்றி அவசர சிகிச்சைகளை அளிப்பதற்குத் தேவையான கூடார வசதிகள் மற்றும் யானையை மீட்கும் பணிகளுக்கான கனரக வாகன வசதிகள் சம்மாந்துறை பிரதேச சபையினால் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

வயல்வெளியின் சேற்றுப் பகுதியில் எழ முடியாமல் வீழ்ந்து கிடக்கும் இவ் யானையின் உயிரைப் பாதுகாத்து, அதனை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக வனவிலங்கு மருத்துவக் குழுவினர் வியாழக்கிழமை(22) முதல் தொடர்ச்சியாக களத்தில் நின்று தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு.!

மழைக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைத்து, அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர உதவும் நோக்கில், விசுவமடு பகுதியில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. புதிய…

82 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியில் இருந்து மீட்கப்பட்ட ஆணிகளும், உலோகங்களும் சவப்பெட்டிகளுக்குரியவையே.!

செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணிகள், உலோகங்கள் உள்ளிட்ட இதர பொருட்கள் சவப் பெட்டிகளில் இருந்து பிரிகையடைந்த கூறுகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டியுள்ளார்.…

75 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இலங்கையர்கள் கைது.!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில், படகு மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த 3 பேரை இராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் பிடித்து விசாரணை…

87 0 0
இலங்கை செய்திகள்

புதிய சட்டமூலத்தால் ஆபத்து எதுவுமில்லை.!

இலங்கையில் தற்போது பேசுபொருளாகியுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் குறித்துப் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் தேவையற்றது என்றும், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது போராட்டங்களில்…

71 0 0