ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை!
நிலவும் சட்டத்திட்டங்களுக்கமைய, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் என்ற வகையில் சட்டத்திற்கு உட்பட்டே செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைச்சாலைகளுக்கு தேரர்கள் உள்ளிட்ட கைதிகளை அழைத்து வரும் போது ஒரே விதமான சீருடையே அணிவிக்கப்படுகிறது.
அந்த காலத்தில் குறித்த சிறைச்சாலை சட்டத்தை தயாரித்தவர்கள், தேரர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அதனை தயாரிக்கவில்லை என நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர் சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை பௌத்த மக்களுக்கு மாத்திரமின்றி சகலரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தற்போது அவரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு கோரி தேரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய சட்டத்திட்டங்களுக்கமைய, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

