உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்களில் முறைகேடு! : விசாரணைகள் ஆரம்பம்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
52 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் ஊடாக நிரந்தர வீடுகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் மீளவும் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டாலும் அவற்றை மூடி மறைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

கிளிநொச்சி மாவட்டத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெற்ற வீட்டு திட்ட பயனாளிகள் தெரிவில் ஏற்கனவே பல்வேறு திட்டங்களின் ஊடாக நிரந்தர வீடுகளைப் பெற்று முழுமைப்படுத்தியவர்களுக்கும் டித்வா வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இடம்பெற்ற முறைகேடுகளால் அதற்கான கொடுப்பனவுகள் தற்போது நிறுத்தப்பட்ட நிலையில் உண்மையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளை கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் டித்வா புயல் காரனமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வீடு திட்ட பயனாளிகள் தெரிவில் பல்வேறு முறை கோடுகள் இடம்பெற்றதாக 2010ம் ஆண்டு மீள் குடியேற்றத்தில் இருந்து இன்றுவரை வீட்டுத் திட்டங்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாத பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல்வேறு முறைப்பாடுகளையும் செய்துள்ள நிலையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இந்த நிலையில் கிளிநொச்சி புளியம்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் 59க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை நிரந்தர வீட்டு திட்டங்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாது உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் தற்காலிக வீடுகளிலும் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றன.

இவர்களுக்கான வீட்டுத்திட்டங்களை வளங்காது குறித்த பகுதியில் ஏற்கனவே நிரந்தர வீட்டு திட்டங்களை பெற்றுக் கொண்டு அதனை முழுமைப்படுத்தி அதில் குடியிருந்த குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு முறைகேடான விதத்திலே வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன

இவ்வாறான நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து இவற்றிலிருந்து தப்புவதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட நிரந்தர்வீடுகளின் கூரைகளை அகற்றியும் உள்ளனர்
அதாவது 2016ம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டத்தை பெற்றுக் கொண்ட தனிநபர் ஒருவருக்கு டித்வா திட்டத்தில் கண்டாவளை சமுர்த்தி வங்கியில் அவரது பேரனுடன் இணைந்து ஒரு கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருந்ததுடன்,புதிய வீட்டுத் திட்டத்தின் கீழ் அவருக்கான நிதியும் ஒதுக்கப்பட்டிருந்த்து . விசாரணைகளில் இருந்து தப்புவதற்காக
2026 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் திகதி இரவு 10:00 மணிக்கு பின்னர் , NHDA வீட்டுத் திட்டத்தின் கீழ் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்த அவரது வீடு உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இத்திட்டத்தின் கீழ் வீட்டுத்திட்ட பயனாளியாக தெரிவு செயையும் சுற்று நிருபங்களுக்கு மாறாக தனிநபர் முதியவர்களுக்கும் முறையற்ற விதத்திலே குறித்த வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது-

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு 13 கதிரேசன் விளையாட்டு கழகத்தின் கல்விப் பணி: சாதனை மாணவர்களுக்கு உதவித்தொகை!

கொழும்பு-13, கதிரேசன் வீதியில் இயங்கிவரும் பிரபல ‘கதிரேசன் விளையாட்டு கழகம்’ விளையாட்டுத் துறையில் மட்டுமன்றி, கல்வி மற்றும் சமூகச் சேவைகளிலும் தொடர்ச்சியாகத் தடம் பதித்து வருகிறது. அந்த…

54 0 0
இலங்கை செய்திகள்

மடு பிரதான வீதியில் கோர விபத்து : பெண் ப@லி, மூவர் படுகாயம்

மன்னார் மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பு பகுதியில் இருந்து…

83 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை!

நிலவும் சட்டத்திட்டங்களுக்கமைய, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மறைபரப்பு சந்தை நிகழ்வு

உலக மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் காலை விசேட திருப்பலியின் பின்னர் மறைபரப்பு…

49 0 0