நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரின் பொறுப்பற்ற செயல்; சேதமாகிய அராலி வீதி.!
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர், குடிநீர் வழங்கல் குழாயினை புதைப்பதற்கு வீதியை கிளறியதால் அந்த வீதியானது சேதமடைந்த வண்ணம் உள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
அராலி மத்தி சமுர்த்தி வங்கியில் இருந்து செந்தமிழ் கிராமத்துக்கு செல்லுகின்ற வீதியில், குடிநீர் வழங்கல் குழாயை புதைப்பதற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் வீதியானது குறுக்காக கிளறப்பட்டது. இருப்பினும் அந்த வீதியானது இதுவரை மீள் புனரமைப்பு செய்யப்படவில்லை.
குறித்த வீதியால் வாகனங்கள் செல்லுகின்ற போது அந்த வீதியானது உடைந்த வண்ணம் உள்ளது. அத்துடன் அந்த வீதியானது கடந்த சில வருடங்களுக்கு முன்னரே புனரமைப்பு செய்யப்பட்டது.
மழைக்காலம் என்பதால் அந்த வீதியால் தொடர்ச்சியாக வாகனங்கள் செல்லும்போது வீதி மிகவும் மோசமான நிலைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது.
இதுகுறித்து நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த வீதியானது முழுமையாக சேதமடைவதற்கு முன்பாக அதனை சீர்செய்ய வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.


