உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசு காணிகளை கேட்கும் தமிழ் மக்களை கண்டுகொள்வதாக தெரியவில்லை.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
127 பார்வைகள்

ஞானசார தேரருக்கு ஆதராவான காலிமுகத் திடல் போராட்டத்தினை கரிசனையோடு கையாளுகின்ற அரசாங்கம், தமிழ் மக்களின் நீதியான போராட்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி 26 ஆவது வாரமாக இன்று (16.10.2026) முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ஜனாதிபதி அநுர வெளியிட்ட கருத்துக்கள் மீதும், அவர் காண்பித்த உணர்வுகள் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் ஏமாற்றத்தோடு வீதிகளில் காத்திருக்கின்றனர்.

இங்கே நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றவர்களை யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.

பல தசாப்தங்களாக உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் காணிகளை பறிகொடுத்துவிட்டு தவித்து வருகின்ற மக்கள், தேசிய மக்கள் சக்தியினர் வழங்கிய உறுதிமொழிகளை நம்பி வாக்களித்திருந்தனர்.

குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவின் உணர்வுபூர்வமான கருத்துகள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருந்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாகியும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக அவர்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். தொடர் போராட்டங்களில் கொட்டு மழையிலும் வெய்யிலிலும் தொடர்ந்தும் போராடுகின்ற இந்த மக்களை இந்த அரசாங்கம் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

ஜனாதிபதி அநுரவை நம்பி வாக்களித்த இந்த மக்களை ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக எமது பிரதேசத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற ஆளுநர், அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்ற யாருமே கண்டு கொள்வதாக தெரியவில்லை.

ஆனால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைளை முன்வைத்து கண்டியில் இருந்து பாத யாத்திரை மேற்கொண்டவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் முன்றலை வந்தடைந்து சில மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதியின் செயலாளர் வந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடுகின்றார்.

போராடுகின்றவர்களின் கோரிக்கை சாதகமாக பரிசீலிக்கப்படும் என்று ஆசுவாசப்படுத்துகின்றனர்.

அரசாங்கத்தின் இவ்வாறான இரண்டு விதமான நடைமுறைகளினால் அதிப்தி அடைந்துள்ள, காணிகளுக்காக போராடுகின்ற தமிழ் மக்கள் இந்த அரசாங்கமும் தங்களை மாற்றாந் தாய் மனப்பான்மையோடு நடாத்துவதாக ஆதங்கப்படுகின்றனர்.

காணிகளுக்காக போராடுகின்ற வலி வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு என்பது அசாத்தியமான ஒன்றல்ல, கட்டம்கட்டமாகவேணும் தங்களின் காணிகளை விடுவிக்குமாறே வலியுறுத்துகின்றனர்.

ஆனால், கடந்த அரசாங்கத்தின் இறுதிக் காலங்களில் விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட காணிகளைக்கூட விடுப்பதற்கான உத்தரவுகளை வழங்காமல் இந்த அரசாங்கம் காலத்தினை கடத்துகின்ற நிலைதான் காணப்படுகின்றது.

எனவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவர்கள் இந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து கட்டம் கட்டமாகவேனும் அவர்களின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் பதற்றம்!

அனுராதபுரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டத்தின்போது, அங்கு வந்த நபர் ஒருவருக்கும் தேரர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான நிலைமை…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அவதானிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்க – ஆளுநர் பணிப்புரை!

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அவதானிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் சீர்செய்யுமாறும், நீண்டகால நோக்கில் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின்…

74 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளரிடம் 3 மணித்தியாலங்களிற்கும் அதிகமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை!

கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் கனகசபை  கணேசகுமாரன்  மீது 3:30 மணி நேரம் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் –…

74 0 0
இலங்கை செய்திகள்

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித…

68 0 0