உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மழை வேண்டி பக்தர்களுடன் மண் சோறு சாப்பிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.!

இந்திய செய்திகள் 20 மணி நேரம் முன்
79 பார்வைகள்

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

இதனால் தொகுதி முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகிறது. இதேபோல பருவத்திற்கு சாகுபடி செய்ய முடியாமல் விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. திண்டுக்கல் தென்மேற்கு மாவட்ட செயலாளரும், நிலக்கோட்டை எம்.எல்.ஏ.யுமான அய்யனார் தலைமையில் அம்மையநாயக்கனூரில் உள்ள பிரசித்திபெற்ற அன்னை சுயம்பு முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம், வேள்வி பூஜைகள் நடத்தி, அபிஷேக ஆராதனைகள், சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அய்யனார் எம்.எல்.ஏ. தலைமையில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி ஏராளமான நிர்வாகிகள் முழங்காலிட்டு, மண்சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தனர். மேலும் 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் த.வெ.க. நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பூஜை முடிந்ததும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என எச்சரித்தேன்! : திருமாவளவன் ஆதங்கம்!!

தேர்தலில், மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்று சேகர்பாபுவிடம் அப்போதே சொன்னேன் என தொல். திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான…

83 0 0
இந்திய செய்திகள்

கோவையில் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தின் கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று(16) திறந்துவைக்கிறாா். கோவை காந்திபுரம்…

64 0 0
இந்திய செய்திகள்

கடத்தல் அச்சுறுத்தலால் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏயர் இந்தியா விமானம்!

ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏயர் இந்தியா சர்வதேச விமானம், கடத்தல் முயற்சி குறித்த சந்தேகத்தால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, நேற்று காலை ஜெய்ப்பூர் சர்வதேச விமான…

71 0 0
இந்திய செய்திகள்

‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ யின் தலைவர்கள் திகார் சிறையில் அடைப்பு!

‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோர் ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு டெல்லியின் திகார் சிறையில் அடைக்கப்பட்டதாகக்…

65 0 0