உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
19 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மடு பிரதான வீதியில் கோர விபத்து : பெண் ப@லி, மூவர் படுகாயம்

98 பார்வைகள்

மன்னார் மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியில் இருந்து நான்கு பேர் கார் ஒன்றில் மடுத் தேவாலயம் நோக்கி பயணித்த நிலையில், மதவாச்சி வீதியூடாக மடு சந்தியை வந்தடைந்த நிலையில், மடு பிரதான வீதி ஊடாக மடுத் தேவாலயம் நோக்கி சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மடு தேவாலயத்தில் இருந்து சில கிலோ மீற்றர் தூரத்திற்கு முன்பு அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்பு, வீதியை விட்டு விலகி மரத்தில் கார் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காயமடைந்த மூன்று பேரையும் மேலதிக சிகிச்சைக்காக பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிரோமி லக்சிகா மாரி பெர்னாண்டோ ( வயது – 55) என்ற பெண்ணின் சடலம், பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சாரதியின் தூக்கக்கலக்கத்தில் இந்த விபத்து இடம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பாக மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விமானத்தில் ஆண் குழந்தையை பிரசவித்த இலங்கைப் பணிப்பெண்!

குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் இலங்கை பணிப் பெண் ஒருவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய…

64 0 0
இலங்கை செய்திகள்

ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை

ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (19) கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். இச்சட்டமூலம் முதலாம் வாசிப்பிற்காக 2026.08.19 அன்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும்…

70 0 0
இலங்கை செய்திகள்

படுகொ@லை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 26-ஆம் ஆண்டு நினைவேந்தல்!

படுகொலை செய்யப்படட ஊடகவியலாளர் மயில்வகனம் நிமலராஜனின் 26-ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஈகைச் சுடரேற்றி, அன்னாரின் உருவப்…

69 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகள் விநியோகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகளும், 20 மீனவர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதையும், இயற்கை…

78 0 0