உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மறைபரப்பு சந்தை நிகழ்வு

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
43 பார்வைகள்

உலக மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் காலை விசேட திருப்பலியின் பின்னர் மறைபரப்பு சந்தை நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிலையில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

திருப்பலியை தொடர்ந்து மன்னார் மறை மாவட்டம் உதயமாகி நூறாவது ஆண்டையொட்டி முன்னெடுக்கப்படும் மறைபரப்பு ஞாயிறு தினத்தையொட்டி ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மறைபரப்பு சந்தை நிகழ்வை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

இதன் போது தூய செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை பி . கிறிஸ்து நாயகம் அடிகளார் உள்ளடங்களாக அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது இடம்பெற்ற மறைபரப்பு சந்தை நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உலக மறைபரப்பு ஞாயிறு கத்தோலிக்க திருச்சபையால் உலகளாவிய நற்செய்தி அறிவிப்புப் பணிக்காகவும், மறைப்பணியாளர் களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்துக்காகவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் கடைபிடிக்கப்படும் ஒரு சிறப்பான திருவழிபாட்டு நாளாகும். இந்த ஆண்டுக்கான மறைபரப்பு ஞாயிறு இன்று (அக்டோபர் 18, 2026) அனுசரிக்கப் படுகிறமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மடு பிரதான வீதியில் கோர விபத்து : பெண் ப@லி, மூவர் படுகாயம்

மன்னார் மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பு பகுதியில் இருந்து…

76 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை!

நிலவும் சட்டத்திட்டங்களுக்கமைய, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார…

61 0 0
இலங்கை செய்திகள்

விரைவில் எரிவாயு விநியோகம் : லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

3,900 மெட்ரிக் தொன் திரவ பெட்ரோலிய வாயுவை (LPG) ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று (18) நாட்டை வந்தடையவுள்ளதாக ‘லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்’ (Litro…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ரூ.2 கோடி பெறுமதியான 7 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு! ஒருவர் கைது

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான 7 உயர் திறன் மோட்டார் சைக்கிள்களை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப்…

61 0 0