உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுவாயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் தகவல்!

உலக செய்திகள் 17 மணி நேரம் முன்
71 பார்வைகள்

அதிக அளவிலான அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுஆயுதக் குறைத்தல் அல்லது முழுமையாக அகற்றுதல் (Denuclearization) தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல்களின்படி, உலகின் அதிகளவு அணுஆயுதங்களைக் கொண்ட நாடாக ரஷ்யா விளங்குவதுடன், அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவும் சீனாவும் காணப்படுகின்றன.

இருப்பினும், பயன்பாட்டில் உள்ள (Deployed) ஏவுகணைகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவே ரஷ்யாவை விட முன்னணியில் உள்ளது.

நியூஸ்மெக்ஸ் (Newsmax) ஊடகத்துக்கு அளித்த நேர்காணலின் போது, சீனா இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் அணுஆயுதப் பலத்தில் அமெரிக்காவுக்கு நிகராகச் “சமநிலையை எட்டும்” என தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“சாத்தியமானால் அணுஆயுதங்களை முழுமையாக அகற்றவே நான் விரும்புகிறேன். எனவே, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் இது குறித்துப் பேச்சுவார்த்த நடத்தி வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் (Xi Jinping) இது குறித்து விவாதித்துள்ளதாகவும் நியூஸ்மெக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ‘நியூ ஸ்டார்ட்’ (New START) அணுஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தின் காலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோரால் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை மேலும் தொடர்வதற்கு, அரசாங்கத்தின் விசேட நிர்வாகத் தீர்மானம் அவசியமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஈரான் மீது அமெரிக்கா அணுஆயுதங்களைப் பயன்படுத்தாது என்றும், அந்த நாட்டிற்கு அமெரிக்கத் தரைப்படை வீரர்களை அனுப்புவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவின் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 3 சிறுவர்கள் உட்பட நால்வர் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்தனர். வியாழக்கிழமை…

75 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய சரக்குக் கப்பல் : விலை உயர்ந்த பொருட்களைத் தேடி படை எடுக்கும் பொதுமக்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கொள்கலன்களில் இருந்த ஐபோன்கள்,…

73 0 0
உலக செய்திகள்

யேமனின் ஜனாதிபதி மாளிகை மீது வான்வழித் தாக்குதல்: 5 பேர் உயி@ரிழப்பு!

யேமன் நாட்டின் தற்போதைய தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில்…

74 0 0
உலக செய்திகள்

சீனாவையும் வட கொரியாவையும் இணைக்கும் பாலம் திறந்து வைப்பு

அயல் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள் மேம்பட்டு வரும் நிலையில், சீனாவையும் வட கொரியாவையும் இணைக்கும், நீண்டகாலமாகத் தாமதமான சாலைப் பாலம் திறக்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள்…

89 0 0