உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஷிரந்தி ராஜபக்ஷவின் முன் பிணை மனு நிராகரிப்பு.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
100 பார்வைகள்

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த முன் பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று(12) நிராகரித்துள்ளது.

‘சிரிலிய சவிய’ மோசடி தொடர்பான நிதிப் குற்றப் புலனாய்வு பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் அவர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் இந்த முன் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த 6ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இது தொடர்பில் இன்றைய தினம் (12) நீதிமன்றத்தில் முன்னிலையாகி விபரங்களை அறிக்கை செய்யுமாறு நிதிப் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இந்த முன் பிணை கோரிக்கையை நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இதனிடையே, தற்போது ‘சிரிலிய சவிய’ மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகளுக்கமைய தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ஷ நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கஸ்ஸப தேரர் விவகாரம் : பொலிஸார் விளக்கம்!

கொழும்பு, விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

பதின்ம வயதினரின் “உளமேம்பாட்டினூடாக வளமான சமூகம்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வூட்டல்!

பதின்ம வயதினரின் உளநலத்தை மேம்படுத்தி, தற்கொலைகள் மற்றும் சிறுவர் வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தரம் 9 மாணவர்களைப் பயனாளிகளாகக் கொண்ட முழுநாள் செயலமர்வொன்று…

64 0 0
இலங்கை செய்திகள்

கைத்தொலைபேசி ஊடாக ஐஸ் போ@தைப் பொருள் வியாபாரம்- சந்தேகநபர் கைது

சாய்ந்தமருது மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் சாய்ந்தமருது பொலிஸாரால் சனிக்கிழமை (17) மாலை…

74 0 0
இலங்கை செய்திகள்

திருடர்களைத் தப்பவிடாதீர்கள்! : அநுரவுக்கு ஆதரவாகக் கொழும்பில் ஒன்றுதிரண்ட மக்கள்

“திருடர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு எதிரான சதிமுயற்சிகளைத் தோற்கடிப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ், “ஜனவரமே புரவசியோ” (மக்கள் ஆணை) அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று…

23 0 0