உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கைத்தொலைபேசி ஊடாக ஐஸ் போ@தைப் பொருள் வியாபாரம்- சந்தேகநபர் கைது

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
79 பார்வைகள்

சாய்ந்தமருது மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் சாய்ந்தமருது பொலிஸாரால் சனிக்கிழமை (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று மாவடிப்பள்ளிப் பகுதியில் இருந்து சாய்ந்தமருது பகுதி நோக்கி வன் வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்தப்பட்ட போது குறித்த 35 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைத்தொலைபேசி ஊடாக மின்னல் வேகத்தில் குறுஞ்செய்திகளைப் பரிமாறி, மிகவும் நுணுக்கமான முறையில் இச்சட்டவிரோத வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான சந்தேகநபரைச் சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை இன்று(18) சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் இச்சுற்றிவளைப்பு அம்பாறை மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் மேற்பார்வையிலும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனையிலும் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எஸ். இந்திக தலைமையிலான பொலிஸ் சார்ஜன்ட்களான பாறுக் (43890), கியாஸ் (76369), மோகன்ராஜ் (83645) மற்றும் பொலிஸ் சாரதி சஞ்சீவ அடங்கிய குழுவினர் இச்சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹப்புத்தளையில் பலத்த மழை: இரு வீடுகள் மீது மண்மேடு சரிவு!

ஹப்புத்தளை நகரில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தினால் குறித்த…

60 0 0
இலங்கை செய்திகள்

காவன்திஸ்ஸ யானையின் இழப்புத் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும்!

காவன்திஸ்ஸ யானையின் மரணம் குறித்து எதிர்காலத்தில் சுயாதீனமான விசாரணை ஒன்று நடத்தப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர்…

50 0 0
இலங்கை செய்திகள்

திரையரங்கிலிருந்து பெருந்தொகையான தோட்டாக்கள், மற்றும் துப்பாக்கிகள் மீட்பு

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் கைக் குண்டுகளுடன் சந்தேக…

60 0 0
இலங்கை செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மறுபரிசீலனை முடிவுகள் வெளியீடு!

2026-ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனைப் (Re-scrutinized) பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் தமது பரீட்சை மறுபரிசீலனைப் பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள்…

64 0 0