உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருடர்களைத் தப்பவிடாதீர்கள்! : அநுரவுக்கு ஆதரவாகக் கொழும்பில் ஒன்றுதிரண்ட மக்கள்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
27 பார்வைகள்

“திருடர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு எதிரான சதிமுயற்சிகளைத் தோற்கடிப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ், “ஜனவரமே புரவசியோ” (மக்கள் ஆணை) அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணி, கொழும்பு – கோட்டையிலிருந்து ஆரம்பமாகி காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தைச் சென்றடைந்தது.

“திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு எதிராகச் செயற்படும் சதிவலையைத் தோற்கடிப்போம்” என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டனர்.

“ஜனாதிபதி அவர்களே, நாட்டை அழித்த ஊழல்வாதிகளின் சதிக்கு இடமளிக்காதீர்கள்!” என்று கோஷங்களை எழுப்பி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குத் தமது ஆதரவையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதிக்கு விசேட கோரிக்கை அடங்கிய மகஜரொன்றை கையளிக்கப் பேரணியில் கலந்துகொண்டோர் முற்பட்டனர். எனினும், அந்தவேளையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அலுவலகத்தில் இருக்கவில்லை என்று தெரிவித்த அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள், அதற்குப் பதிலாக உரிய அதிகாரிகளிடம் அந்த மகஜரைக் கையளிப்பதற்கான வசதிகளைச் செய்து தருவதாக அறிவித்தனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர், அந்த மகஜரைக் கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்துக்குள் சென்று அதிகாரிகளிடம் அதனைக் கையளித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹப்புத்தளையில் பலத்த மழை: இரு வீடுகள் மீது மண்மேடு சரிவு!

ஹப்புத்தளை நகரில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தினால் குறித்த…

60 0 0
இலங்கை செய்திகள்

காவன்திஸ்ஸ யானையின் இழப்புத் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும்!

காவன்திஸ்ஸ யானையின் மரணம் குறித்து எதிர்காலத்தில் சுயாதீனமான விசாரணை ஒன்று நடத்தப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர்…

50 0 0
இலங்கை செய்திகள்

திரையரங்கிலிருந்து பெருந்தொகையான தோட்டாக்கள், மற்றும் துப்பாக்கிகள் மீட்பு

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் கைக் குண்டுகளுடன் சந்தேக…

60 0 0
இலங்கை செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மறுபரிசீலனை முடிவுகள் வெளியீடு!

2026-ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனைப் (Re-scrutinized) பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் தமது பரீட்சை மறுபரிசீலனைப் பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள்…

64 0 0