உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
18 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கஸ்ஸப தேரர் விவகாரம் : பொலிஸார் விளக்கம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
40 பார்வைகள்

கொழும்பு, விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

ஞானசார தேரரை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி, நேற்று (17) கருவாத் தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள புத்தர் சிலைக்கு முன்னால் பலாங்கொடை கஸ்ஸப தேரர் தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, கூடாரம் அமைத்து தற்காலிக மேடை ஒன்றை நிர்மாணிப்பது சட்டவிரோதமானது எனப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அறிவுறுத்துவதற்காக பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதன்போது, பலாங்கொடை கஸ்ஸப தேரர் அங்கிருந்த கான்கிரீட் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின்போது பொலிஸ் அதிகாரிகளால் அவர் தாக்கப்படவில்லை எனவும், தேரர் தவறி விழுந்ததன் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்புதல், பொதுமக்களைத் தூண்டிவிடுதல், அமைதியின்மை மற்றும் குழப்பநிலையை ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் இலங்கை பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் மற்றும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் அவற்றைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவாத் தோட்டம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹப்புத்தளையில் பலத்த மழை: இரு வீடுகள் மீது மண்மேடு சரிவு!

ஹப்புத்தளை நகரில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தினால் குறித்த…

60 0 0
இலங்கை செய்திகள்

காவன்திஸ்ஸ யானையின் இழப்புத் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும்!

காவன்திஸ்ஸ யானையின் மரணம் குறித்து எதிர்காலத்தில் சுயாதீனமான விசாரணை ஒன்று நடத்தப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர்…

50 0 0
இலங்கை செய்திகள்

திரையரங்கிலிருந்து பெருந்தொகையான தோட்டாக்கள், மற்றும் துப்பாக்கிகள் மீட்பு

கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் கைக் குண்டுகளுடன் சந்தேக…

60 0 0
இலங்கை செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மறுபரிசீலனை முடிவுகள் வெளியீடு!

2026-ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனைப் (Re-scrutinized) பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் தமது பரீட்சை மறுபரிசீலனைப் பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள்…

64 0 0