நாகொட துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் கைது.!
களுத்துறை, நாகொட பகுதியில் நேற்று (9) முற்பகல் உணவகமொன்றின் முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் மட்டக்களப்பு நோக்கி தப்பிச் சென்று கொண்டிருந்த நிலையில் வாழைச்சேனை – நாவலடி சந்திப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் வீதித் தடை அமைக்கப்பட்டு, குறித்த பேருந்து சோதனையிடப்பட்ட போதே சந்தேகநபர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேகநபரிடமிருந்து 40 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், ஒரு ஸ்மார்ட் கைப்பேசி மற்றும் 6 சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.