பால் ஏற்றிச் சென்ற வாகனத்தில் பயணித்த மாணவி : தவறி கீழே விழுந்து உயி@ரிழப்பு!
பால் ஏற்றிச் செல்லும் லொறியில் பயணித்த பாடசாலை மாணவி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதியும் உதவியாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இச் சம்பவம் இன்று 25 ம் திகதி நோர்வூட், வென்ச்சர் ஐம்பது ஏக்கர் பகுதியில் வசித்து வந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், பால் ஏற்றிச் செல்லும் லொறியில் ஏறி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி பாடசாலையில் நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அது நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பால் விநியோகத்தில் ஈடுபடும் லொறியின் பின்புறத்தில் ஏறிப் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து இன்று (25) திகதி பிற்பகல் இடம்பெற்றுள்ளது.நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதன்போது, எதிர்பாராத விதமாக லொறியில் இருந்து தவறி விழுந்த மாணவி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்த மாணவி சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பில் குறித்த லொறியின் சாரதியும் உதவியாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


