84 கோடி பெண்கள் பா@லியல் ரீதியான வன்முறைகளால் பாதிப்பு – பிரதமர்
உலகளவில் 84 கோடி பெண்கள் பாலின அடிப்படையிலான தகாத நடத்தைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
பாலின அடிப்படையிலான தகாத நடத்தைகளுக்கு எதிரான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, இன்று நாடாளுமன்றத்தில் விசேட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பாலின அடிப்படையிலான தகாத நடத்தைகளை தடுப்பதற்குத் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை கைச்சாத்திட்டுள்ள பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகளை உள்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட அங்கீகாரத்தை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இன்றைய தினத்தை அடையாளப்படுத்தும் முகமாகப் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்படப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் செம்மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து சபை அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பி


