உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வடக்கில் அதிக பதக்கங்களை வென்று மல்லாவி மத்திய கல்லூரி சாதனை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
169 பார்வைகள்

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய குத்துச்சண்டைப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை ஐந்து நாட்களாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டிகள் நேற்று (09.10.2026) நடைபெற்றன.

இப்போட்டியில் பங்குபற்றிய மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் ஒருவர் வெள்ளிப் பதக்கத்தையும், இருவர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று பாடசாலைக்கும், பிரதேசத்துக்கும், துணுக்காய் கல்வி வலயத்துக்கும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பதக்கங்களை வென்ற மாணவர்களின் விபரங்கள் வருமாறு:-
எஸ். டானுஜா (S. Danuja) :- 57 – 60 கிலோகிராம் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம், எம். அபிஷா (M. Abisha) :- 60 – 65 கிலோகிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம், யு.கலைவாணி (U. Kalaivaani) – 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 48 – 50 கிலோகிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம்.

இம்மாணவர்களுக்கான குத்துச்சண்டைப் பயிற்சிகளை, முன்னாள் தேசிய குத்துச்சண்டை வீரரும் பல தேசிய வீரர்களை உருவாக்கியவருமான கா. நாகேந்திரன் (வள்ளுவன் மாஸ்டர்) மற்றும் முன்னாள் தேசிய வீராங்கனையும் குத்துச்சண்டைப் பயிற்றுநருமான இந்துகா தேவி ஆகியோர் வழங்கியிருந்தனர்.

தேசிய மட்டப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றதன் மூலம், வடமாகாணப் பாடசாலைகளில் அதிக பதக்கங்களைப் பெற்ற பாடசாலையாக மல்லாவி மத்திய கல்லூரி சாதனை படைத்துள்ளது.

குத்துச்சண்டைப் போட்டியில் மாணவர்கள் வெளிப்படுத்திய திறமையும் விடாமுயற்சியும் பாடசாலையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ளதுடன், மல்லாவி பிரதேசத்துக்கும் துணுக்காய் கல்வி வலயத்துக்கும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

84 கோடி பெண்கள் பா@லியல் ரீதியான வன்முறைகளால் பாதிப்பு – பிரதமர்

உலகளவில் 84 கோடி பெண்கள் பாலின அடிப்படையிலான தகாத நடத்தைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். பாலின அடிப்படையிலான தகாத நடத்தைகளுக்கு எதிரான…

27 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியத்துறையில் நிலவும் பற்றாக்குறைகள் தொடர்பில் சத்தியலிங்கம் எம்.பி சுகாதார அமைச்சரிடம் கேள்வி..!

பாராளுமன்றத்தில் மருத்துவப் புனர்வாழ்வு சேவைகள் தொடர்பாகக் கேள்வியெழுப்பிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், இலங்கையில் இயங்குகின்ற மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலைகள் மற்றும்…

35 0 0
இலங்கை செய்திகள்

பால் ஏற்றிச் சென்ற வாகனத்தில் பயணித்த மாணவி : தவறி கீழே விழுந்து உயி@ரிழப்பு!

பால் ஏற்றிச் செல்லும் லொறியில் பயணித்த பாடசாலை மாணவி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதியும் உதவியாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்…

41 0 0
இலங்கை செய்திகள்

மூடநம்பிக்கை, சாதியப் பாகுபாடுகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் சரோஜா!

மூடநம்பிக்கைகள், சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஏனைய தீங்கு விளைவிக்கும் சமூக நடைமுறைகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த, முன்மொழியப்பட்டுள்ள சமூக ஒழுக்கவியல் கட்டமைப்பின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத்…

41 0 0