உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
11 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கத்தின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம்.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
61 பார்வைகள்

காலமான பிரபல அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், ஓய்வுநிலை ஆசிரியருமான சி.அ. யோதிலிங்கத்தின் (வயது 70) இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை யாழ். குப்பிளான் தெற்கு, வீரமனைப் பகுதியில் அமைந்துள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் இடம்பெறும் என்று குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணத்தில் காலமானார்.

வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம், குப்பிளான் மண்ணில் பிறந்த சி.அ. யோதிலிங்கம், தொழில் நிமித்தம் நீண்டகாலம் கொழும்பில் வசித்தார். பின்னர் உரும்பிராயிலும் வசித்து வந்தார். அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர், கல்வியியலாளர் எனப் பல்துறை ஆற்றல்களைக் கொண்டிருந்த அவர், அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

1970ஆம் ஆண்டு அப்போதைய திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசால் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பகால உறுப்பினராகப் பங்கெடுத்து தனது அரசியல் பயணத்தை அவர் தொடங்கினார். அதன்பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச் சூழலிலும், ஈழத்து அரசியல் களத்திலும் தீவிரமாக இயங்கி வந்தார்.

தமிழர் தேசத்தின் அரசியல் விடுதலைக்காக தனது 16ஆவது வயதிலேயே செயற்படத் தொடங்கிய அவர், வாழ்வின் இறுதி வரை கொள்கை மாறாது உறுதியுடன் பயணித்தார். தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தனக்கெனத் தனித்துவமான அடையாளத்தையும் உருவாக்கினார்.

ஈழத்து அரசியல் மற்றும் தமிழ்த் தேசியம் தொடர்பான பல தசாப்தகால ஆய்வுகளில் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும், பல முக்கிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். மலையக மக்கள் தொடர்பான கொள்கை விவாதங்களை முன்னெடுத்ததுடன், மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் யாழ். குப்பிளான் தெற்கு, வீரமனை பகுதியில் அமைந்துள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அவரது புகழுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாகொட துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் கைது.!

களுத்துறை, நாகொட பகுதியில் நேற்று (9) முற்பகல் உணவகமொன்றின் முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர்…

95 0 0
இலங்கை செய்திகள்

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வடக்கில் அதிக பதக்கங்களை வென்று மல்லாவி மத்திய கல்லூரி சாதனை.!

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய குத்துச்சண்டைப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் பதக்கங்களை வென்று சாதனை…

90 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தல்; சந்தேகநபரின் சொத்துக்கள் முடக்கம்.!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதெனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள்…

80 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெர்குஸன் வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

79 0 0