பொலிஸார் மீது கொடூரத் தாக்குதல்; சந்தேகநபர்கள் கைது.!
மாத்தளை – யட்டவத்தை பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய திடீர் தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை யட்டவத்தை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதே இந்தக் கும்பலால் வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலின் போது பொலிஸ் அதிகாரிகள் பயணித்த முச்சக்கரவண்டியும் அந்தக் கும்பலால் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 4 நபர்களை யட்டவத்தை பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யட்டவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.