உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

இந்திய செய்திகள் 48 நிமிடங்கள் முன்
53 பார்வைகள்

மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வெற்றி பெற்றுள்ளனர். இரு தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1,84,413 பேர் வாக்களித்தனர். இதன் மூலம் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 61,470 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் 43,916 வாக்குகள் பெற்றார். இதனால் மரகதம் குமரவேல் 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத் 38,770 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி 1,703 வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1,441 வாக்குகளையும் பெற்றன.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்யபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 2,23,306 வாக்காளர்களில் 1,79,314 பேர் வாக்களித்தனர். இதன் மூலம் 80.30 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் சுகன்யா 52,400 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் சத்யபாமா 10,196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி 41,078 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி 4,954 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1,099 வாக்குகளையும் பெற்றன.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். இந்த இடைத்தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்கள், கடந்த 4 மாத கால ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி எனக் கூறி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தேர்தல் நிலவரம் : தாராபுரத்தில் அதிமுக முன்னிலை

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அனைத்திந்திய…

74 0 0
இந்திய செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: தவெக முன்னிலை

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி…

94 0 0
இந்திய செய்திகள்

மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகளை…

87 0 0
இந்திய செய்திகள்

ராகுல் காந்தி மீண்டும் கைது!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் நாளாக இன்று (07) போராட்டம் நடத்திய நிலையில், ஜந்தர் மந்தர்…

85 0 0