உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
11 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர் அதிரடியாக கைது.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
89 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நீண்ட காலமாக கொழும்புத்துறை பகுதியில் இருந்து எடுத்து வரும் மணலை அரியாலை பகுதியில் தேக்கி வைத்து, அங்கிருந்து விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.ஏ.ஜெயமாலின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் மணலுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மூன்று டிப்பர்களும் மணலும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டபின் அவரை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாகொட துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் கைது.!

களுத்துறை, நாகொட பகுதியில் நேற்று (9) முற்பகல் உணவகமொன்றின் முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர்…

95 0 0
இலங்கை செய்திகள்

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வடக்கில் அதிக பதக்கங்களை வென்று மல்லாவி மத்திய கல்லூரி சாதனை.!

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய குத்துச்சண்டைப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் பதக்கங்களை வென்று சாதனை…

90 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தல்; சந்தேகநபரின் சொத்துக்கள் முடக்கம்.!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதெனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள்…

80 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெர்குஸன் வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

79 0 0