2019 இல் அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகள் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவு
டயகம ஈஸ்ட் தோட்ட மக்கள் விரைவில் புதிய வீடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நுவரெலியா மாவட்ட தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டயகம ஈஸ்ட் தோட்டத்தில், அடிப்படை வசதிகளின்றி தற்காலிக கூடாரங்களிலும் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாகவும் வாழ்ந்து வந்த பெருந்தோட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது நிறைவடைந்துள்ளது.
இத் திட்டத்திற்கு இந்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் புதிய வீட்டின் திறப்புக்காக காத்திருக்கும் பயனாளிகளுக்கு கிடைக்க உள்ளது.