உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்திய விமானிக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி விருது!

உலக செய்திகள் 9 மணி நேரம் முன்
98 பார்வைகள்

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த வானூர்தியில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலின்போது துணிச்சலுடனும் தொழில்முறை திறனுடனும் செயற்பட்ட இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சாருக்கு (Captain Smit Machhar) ஜனாதிபதி விருது வழங்கப்படவுள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அறிவித்துள்ளார்.

Flydubai நிறுவனத்துக்குச் சொந்தமான FZ1073 வானூர்தியில் ஏற்பட்ட அவசர நிலைமையின்போது, வானூர்திப் பணியாளர்களுக்கு உதவி செய்து தாக்குதல்தாரியைக் கட்டுப்படுத்திய இஸ்ரேலியப் பயணிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு ஜெருசலேமில் நடைபெற்றது.

இதன்போதே இஸ்ரேல் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்திய விமானியின் துணிச்சலும் தொழில்முறைத் திறனும் அசாம்பாவிதம் ஒன்றைத் தவிர்க்க உதவியதாக ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.

விமானி முழுமையாகக் குணமடைந்த பின்னர், இஸ்ரேல் மக்களின் சார்பில் அவருக்கு குடிமக்கள் வீரத்திற்கான ஜனாதிபதி விருதை நேரில் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த FZ1073 வானூர்தியில் 174 பயணிகள் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலியப் பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வானூர்தியில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலின்போது விமானியின் செயற்பாடு பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மாலைத்தீவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா விதிகளில் மாற்றம்!

மாலைத்தீவில் தொழில்வாய்ப்புகளுக்காகச் செல்லும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு, விசா விதிகளைப் புதுப்பிக்க அந்தநாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வணிக விசா அல்லது விசேட விசாவைப்…

85 0 0
உலக செய்திகள்

இந்தோனேஷிய காட்டுத் தீயினால் அண்டை நாடுகளும் பாதிப்பு

இந்தோனேஷியாவின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக பரவிவரும் காட்டுத் தீ காரணமாக உருவான அடர்ந்த புகைமூட்டம், நாடு முழுவதும் பரவியுள்ளதுடன் மலேசியா, சிங்கப்பூர் மற்றும்…

64 0 0
உலக செய்திகள்

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர்…

54 0 0
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ட்ரம்பின் தங்க நிற நிர்வாணச் சிலை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சித்தரிக்கும் தங்க நிற நிர்வாணச் சிலையொன்று பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. டேனிஷ் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்…

66 0 0