உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ட்ரம்பின் தங்க நிற நிர்வாணச் சிலை!

உலக செய்திகள் 10 மணி நேரம் முன்
66 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சித்தரிக்கும் தங்க நிற நிர்வாணச் சிலையொன்று பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

டேனிஷ் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பெர் கிளாசென் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சி, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான தனது விமர்சனத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணையர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வருகை தரும் இடம் என்பதால், இந்தக் கலைப்படைப்பை காட்சிப்படுத்துவதற்கு இது பொருத்தமான இடம் என பெர் கிளாசென் குறிப்பிட்டுள்ளார்.

டேனிஷ் கலைஞர் ஜென்ஸ் கோல்ஸ்ஜோட் உருவாக்கிய இந்தச் சிற்பம், 23 கரட் தங்கத்தால் பூசப்பட்டுள்ளது. ‘ஆரஞ்சு பிளேக்’ என அழைக்கப்படும் இந்தச் சிற்பம் சுமார் 8.5 அடி உயரம் கொண்டதாகும்.

சிற்பத்தில் ட்ரம்ப் நிர்வாணமாக, தன்னைவிட சிறிய உருவம் கொண்ட மற்றொரு மனிதரின் தோள்களில் அமர்ந்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகள், பாதுகாப்புச் செலவினங்கள், நேட்டோ தொடர்பான நிலைப்பாடுகள் மற்றும் கிரீன்லாந்து தொடர்பான ட்ரம்பின் அணுகுமுறை உள்ளிட்ட விடயங்களில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காணப்படும் பின்னணியில் இந்தக் காட்சிப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சிலை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நவம்பர் மாதம் துருக்கியில் நடைபெறவுள்ள பருவநிலை உச்சிமாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்தச் சிற்பம் பிரேசிலில் நடைபெற்ற COP30 மாநாடு, மியூனிக் பாதுகாப்பு மாநாடு மற்றும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மாலைத்தீவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா விதிகளில் மாற்றம்!

மாலைத்தீவில் தொழில்வாய்ப்புகளுக்காகச் செல்லும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு, விசா விதிகளைப் புதுப்பிக்க அந்தநாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வணிக விசா அல்லது விசேட விசாவைப்…

85 0 0
உலக செய்திகள்

இந்தோனேஷிய காட்டுத் தீயினால் அண்டை நாடுகளும் பாதிப்பு

இந்தோனேஷியாவின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக பரவிவரும் காட்டுத் தீ காரணமாக உருவான அடர்ந்த புகைமூட்டம், நாடு முழுவதும் பரவியுள்ளதுடன் மலேசியா, சிங்கப்பூர் மற்றும்…

64 0 0
உலக செய்திகள்

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர்…

54 0 0
உலக செய்திகள்

இந்திய விமானிக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி விருது!

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த வானூர்தியில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலின்போது துணிச்சலுடனும் தொழில்முறை திறனுடனும் செயற்பட்ட இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சாருக்கு (Captain Smit…

97 0 0