உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

சிவஞானம், சுமந்திரன் உட்பட நால்வருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
54 பார்வைகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) புதன்கிழமை வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வருடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியின் உப விதிகளுக்கு எதிராக நீக்கியமைக்கு எதிராக தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் தமிழரசுக் கட்சிக்கும் எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி பிறேம்நாத் ஊடாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கினை மாவட்ட நீதவான் இன்று எடுத்துக் கொண்ட போது எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு அடுத்த வழக்கினை திகதியிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தீவிரமடையும் எல் நினோ காலநிலை மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை.!

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல் நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் உலகெங்கிலும் கடுமையான…

41 0 0
இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் கோலாகலமாக ஆரம்பமான உள்ளூராட்சி வார நிகழ்வுகள்.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் சம்மாந்துறை பிரதேச…

32 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அச்சுறுத்தல்; வனஜீவிகள் அலுவலகம் அமைக்க திட்டம்.!

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில் வயல் வெளிகளில் நடமாடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின்…

9 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

மித்தெனிய, மகாக்கொட்டுவ பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (15) ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதுடைய மித்தெனிய…

44 0 0