உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
43 பார்வைகள்

தியாக தீபம் திலீபன் அவர்களது 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் பிரதேசக் கிளையின் செயலாளர் த.தவேந்திரராசா (அமலன்) அவர்களின் தலைமையில் நேற்று (15.09.2026) புளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் பிரதேசக் கிளை அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், கட்சியின் வவுனியா மாவட்ட உபதலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன், பிரதேச சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் தனுசன், செல்வராசா சுசீலன், பொதுமக்களென பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தியாக தீபம் திலீபன் அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தீவிரமடையும் எல் நினோ காலநிலை மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை.!

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல் நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் உலகெங்கிலும் கடுமையான…

41 0 0
இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் கோலாகலமாக ஆரம்பமான உள்ளூராட்சி வார நிகழ்வுகள்.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் சம்மாந்துறை பிரதேச…

32 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அச்சுறுத்தல்; வனஜீவிகள் அலுவலகம் அமைக்க திட்டம்.!

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில் வயல் வெளிகளில் நடமாடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின்…

9 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

மித்தெனிய, மகாக்கொட்டுவ பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (15) ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதுடைய மித்தெனிய…

44 0 0