உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

திருக்கோவில் பிரதேச சபையில் உள்ளூராட்சி வாரம் 2026 ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
33 பார்வைகள்

“வளமான நாடு – அழகான வாழ்வு” மற்றும் “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று (14) திருக்கோவில் பிரதேச சபையில் ஆரம்பமாகின.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாடு மற்றும் வழிகாட்டலின் கீழ் நடைபெறும் இந்நிகழ்வுகள், பாதுகாப்பானதும் வாழ்வதற்கு ஏற்றதுமான சூழலை உருவாக்கி, பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதுடன், தொலைநோக்கான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் “புத்துயிர்க்கும் புதுநகரங்களை” உருவாக்கும் தொடர் வேலைத்திட்டங்களின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகின்றன.

திருக்கோவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக செப்டெம்பர் 14 முதல் 19ஆம் திகதி வரை பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதன்படி, செப்டெம்பர் 14ஆம் திகதி நடமாடும் சேவை மற்றும் வருமானமீட்டும் தினம், 15ஆம் திகதி பொதுப்பயன்பாட்டு தினம் மற்றும் சர்வதேச ஜனநாயக தினம், 16ஆம் திகதி சுற்றாடல் மற்றும் மரநடுகை தினம், சர்வதேச ஓசோன் படலப் பாதுகாப்பு தினம், 17ஆம் திகதி சுகாதாரம் மற்றும் துப்புரவு தினம், சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினம், 18ஆம் திகதி இலக்கியம், கல்வி, நூலகம் மற்றும் விளையாட்டு தினம் ஆகியன நடைபெறவுள்ளன.

செப்டெம்பர் 19ஆம் திகதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் விழா நிறைவும் இடம்பெற்று உள்ளூராட்சி வார நிகழ்வுகள் நிறைவடையவுள்ளன.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதுடன், உள்ளூராட்சி வார கீதமும் இசைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், நிதி உதவியாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.

இதன் பின்னர், வருமான அறவீட்டின் முதற்கட்ட நடவடிக்கையாக பிரதேச சபை உத்தியோகத்தர்கள் குழுக்களாகப் பிரிந்து திருக்கோவில் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

பொதுமக்களின் பங்களிப்புடன் உள்ளூராட்சி சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த உள்ளூராட்சி வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காலணிகளுக்குள் போ@தைப்பொருள்: சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் கைது

காலணிகளுக்குள் போ@தைப்பொருட்களை ஒளித்து வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் இன்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய,…

29 0 0
இலங்கை செய்திகள்

செப்டெம்பர் மாதத்திற்குரிய அஸ்வெசும கொடுப்பனவு குறித்த அறிவிப்பு

செப்டெம்பர் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை…

27 0 0
இலங்கை செய்திகள்

டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல்!

வாடகை செலுத்தத் தவறியதற்காக, ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல் வைக்க இன்று 14.09.2026 ம் திகதி அன்று ஹட்டன் டிக்கோயா…

30 0 0
இலங்கை செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதன்!

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் அண்மையில் நிகழ்வு ஒன்றில் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், அண்மையில் மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு…

37 0 0