உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

கொக்கைன் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
47 பார்வைகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 43 வயதுடைய உகண்டா பிரஜை என தெரியவந்துள்ளது.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் உகண்டாவில் இருந்து கட்டார் சென்றடைந்து, பின்னர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-664 விமானத்தில் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர், மதியம் வரை விமான நிலையத்தின் முதல் மாடியில் அவர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகள் வெளியேற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபர் விழுங்கியுள்ளதாகக் கூறப்படும் எஞ்சிய கொக்கைன் உருண்டைகளை வெளியேற்றுவதற்காக, அவரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மீனவர்களின் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய “கொப்பரா” மீன்.!

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில் இன்று (14) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ் கடல் மீன் சிக்கியுள்ளது. சுமார்…

48 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு.!

கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் வட்டார…

41 0 0
இலங்கை செய்திகள்

விபத்துக்குள்ளான P 4447 வேகத் தாக்குதல் படகு மீட்பு.!

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய இலங்கை கடற்படையின் P 4447 வேகத் தாக்குதல் ரோந்துப் படகு,…

35 0 0
இலங்கை செய்திகள்

பணியாற்ற அதிகாரம் அவசியம்; மாகாண சபை தேர்தலில் களமிறங்க நளின் பண்டார விருப்பம்.!

நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளபோதிலும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான பணிகளை திறம்பட செய்ய முடியாது…

56 0 0